
ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தௌசாப் பகுதியில் மணமகளின் கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெறுவதற்காக மணமகன் வீட்டார்கள் வந்தனர். மணமகன் வீட்டாரோடு காரில் அவரது உறவினர் ஒருவர் வந்திருந்தார். அப்போது மணமகன் வீட்டார் வந்ததும் மணமகள் வீட்டார் பட்டாசு வெடி வெடித்து வரவேற்றனர். அப்போது வெடி வைக்கும் இடத்தில் மணமகனின் உறவினர் அவரது காரை அங்கு நிறுத்த முயன்றுள்ளார். இதனால் மணமகளின் வீட்டாருக்கும், மணமகனின் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகனின் உறவினர் வேகமாக சென்று காரை இயக்கி அவரிடம் தகராறில் ஈடுபட்ட ஏழு பேர் மீதும் மோதியுள்ளார்.
அந்த ஏழு பேரும் இதனால் பலத்த காயமடைந்துள்ளனர். உடனே அருகில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த ஏழு பேரில் ஒருவர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காரை விட்டு மோதிய நபர் அந்த இடத்தை விட்டு வேகமாக தப்பி ஓடி உள்ளார். இது குறித்த இந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர். திருமணத்தில் மணமகன் வீட்டார்ருக்கும், மணமகள் வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
इंसानियत को शर्मसार करने वाली घटना
राजस्थान के दौसा जिले के लालसोट में लाडपुरा गांव में शादी समारोह लोगों को कार से कई लोगो को कुचले जाने की सूचना! pic.twitter.com/LOEA8D9lAW— suman (@suman_pakad) November 17, 2024