
நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புதைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுவன் ஆறுமுகம் என்பதும், அவர் டவுண் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த சிறுவன் கட்டிட வேலை செய்து வந்த நிலையில் இவரை சிலர் கொலை செய்து காட்டில் புதைத்தது தெரிய வந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.