அமெரிக்காவின் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி பிரையன் ஜெப்ரி ரேமண்ட் (48) பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றியபோது, 24 பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். ரேமண்ட் தனது அதிகாரம் மற்றும் அரசாங்க குடியிருப்பை பயன்படுத்தி, டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள் வழியே பெண்களை அழைத்து வந்து, மயக்க மருந்து கலந்த மதுபானம் கொடுத்து, அவர்களை பலாத்காரம் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் வெளிப்பட்டது, அதன்போது மெக்சிகோவில் இருக்கும் அவரது குடியிருப்பில் இருந்து ஒரு பெண் நிர்வாண கோலத்தில் உதவி கேட்டு கத்தியதைக் கண்ட ஒரு நபர், காவல்துறையினரிடம் புகார் செய்ததின் மூலம் வழக்கு தொடங்கியது. விசாரணையின்போது 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இதனை ஒப்புக்கொண்ட ரேமண்டுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல பெண்களின் வாழ்க்கையை அவர் கடுமையாக பாதித்துள்ளார், மேலும் பலர் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் மன நெருக்கடியில் இருக்கின்றனர்.