
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிர்மலா தேவி(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக, அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி இடைக்கால ஜாமின் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு மீது விசாரணை தொடர்ந்து நடத்தி முடிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி புகழேந்தி, விசாரணையை ஒத்திவைத்தார்.