
நவி மும்பையில் பெண்கள் தினத்தன்று அங்குள்ள பர்ப்பிள் பட்டர்பிளை என்ற உணவகத்தில் பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தில் அங்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மஞ்சுரியன் உணவில் ஒரு எலி இருப்பதை பார்த்தார். உடனே அதனை மற்றவர்களிடம் கூற அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஹோட்டல் மேலாளரிடம் முறையிட்டனர். ஆனால் ஹோட்டல் பணியாளர்கள் தங்களின் தவறை ஏற்க மறுத்து விவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் ஹோட்டல் நிர்வாகம் தங்களின் தவறை ஒப்புக்கொண்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பெண்கள் ரபாலே காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் ஆதாரங்களையும் காட்டினர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து பெண்கள் உணவு பாதுகாப்பு துறையிடமும் புகார் கொடுத்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாண்மைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.