ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருமலைச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்செல்வன்- சுகன்யா தம்பதியினருக்கு ஓமிஷா(7) என்ற பெண் குழந்தையும், நிகில்(4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திருமலைச் செல்வன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதால் சுகன்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு கடந்த ஒரு மாதமாக சென்றுவிட்டார். அங்கு தனது தாய் வீட்டில் இருந்து சுகன்யா சாயப்பட்டரைலையில் வேலை பார்த்து வந்துள்ளார். சுகன்யாவையும் குழந்தைகளையும் பார்ப்பதற்காக திருமலைச்செல்வன் சென்றுள்ளார்.

அங்கு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருமலைச்செல்வன் குழந்தைகள் மற்றும் மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் மூவரும் கத்திய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் திருமலைச்செல்வனின் மகன் நிகில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரே மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.