
கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய தாய் ரோசா டெனோரியோ சட்ட விரோதமாக அவரை கடத்திச் சென்றுள்ளார். அதன் பின் காவல்துறை மற்றும் குடும்பத்தினர் பல ஆண்டுகள் தேடிவந்த நிலையில் அவர்களைப் பற்றிய எந்த தகவலையும் பெற முடியாததால் இந்த வழக்கு நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் othram forensic நிறுவனம் மேற்கொண்ட “rapid relati0nship testing”என்ற டிஎன்ஏ பரிசோதனை மூலம் ஆண்ட்ரியாவின் தந்தையின் டிஎன்ஏவை பயன்படுத்தி அவரது உண்மை அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் ஆண்ட்ரியா என்னும் பெண் உயிருடன் இருப்பதையும், தற்போது மெக்சிகோவில் வாழ்ந்து வருவதையும் உறுதி செய்துள்ளனர். இந்த தகவல் கிடைத்த நிலையில் ஆண்ட்ரியாவின் தந்தை மகளை மீண்டும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அதோடு அவருடைய குடும்பத்திற்கு இந்த செய்தி மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. ஆனால் ஆண்ட்ரியாவை கடத்திச் சென்ற ரோசாவின் இருப்பிடத்தை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சம்பவம் டிஎன்ஏ தொழில்நுட்பம், காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தொடர்ந்து ரோசாவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.