கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த  6 மாதங்களாக மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரசாக் என்பவர் இந்த மாணவியை பின்தொடர்ந்து செல்வது உரசுவது  உள்ளிட்ட  தவறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த செயலால் கல்லூரி மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் அவரால்  படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இது குறித்து மாணவி மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரின்  சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து அப்துல் ராசாக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.