கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில் அலுவலக கட்டிடத்திற்கு மேல் டிரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த சிறை ஊழியர்கள் முதலில் பொருட்படுத்தவில்லை. அதன் பின் அந்த டிரோன் 2 முறை கட்டிடத்தை சுற்றி வந்த நிலையில் அதிலிருந்து பச்சை மற்றும் சிவப்பு விளக்குகள் காணப்பட்டது.

அதன் பின்  டிரோன் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனது. இதனால் சந்தேகம் அடைந்த சிறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி காவல்துறை மேலதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில் அந்தப் பகுதியில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள் சிறைச்சாலையை சுற்றி எதற்காக டிரோன் பறந்தது? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .