தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். அதன் பின் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அக்கட்சி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர், தவெக கட்சி கொடியில் யானை சின்னத்திற்கு தடை விதிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் கட்சித் தலைவர் விஜய் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஏப்ரல் 29-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.