
சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் கேமராவில் பதிவான ஒரு பைக்கின் நம்பரை வைத்து அயப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஒரு பெண் மற்றும் வாலிபர் இருந்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது தீன்(36) என்பது தெரியவந்தது.
இவரிடம் கேசியராக பணியாற்றிய தேவி (32) என்பவரின் கணவர் இறந்து விட்டதால் முகமது தீனுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கடந்த 3 நாட்களுக்கு முன்பாக முகப்பேர் பகுதியில் வீடு வாடகைக்கு பார்த்துவிட்டு வரும்போது, எங்களது வண்டியில் பெட்ரோல் இல்லை. அதனால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புதிய சைக்கிளை எடுத்து காயலான் கடையில் ரூ.1000க்கு விற்று அந்த பணத்தில் பெட்ரோல் போட்டோம் என்று கூறினர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.