சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சங்கீதாவின் குடும்பத்தினர் தாய் ராஜேஸ்வரி, தந்தை ராஜேந்திரன், தம்பி சதீஷ்,தங்கை தீபிகா ஆகியோர் அவரது வீட்டிற்கு அருகிலேயே தனித்தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்கீதா தனக்கு சொத்தில் அதிகப்படியான பங்கு வேண்டும் என அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தந்தையும் பின்னர் பங்கு தருவதாக கூறி வந்துள்ளார். இதற்கிடையில் சம்பவ நாளன்று சொத்தை பற்றிய பேச்சுவார்த்தையில் சங்கீதா தனது தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தஅக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்செய்தி குறித்து கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.