
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா மகாராஷ்டிரா வங்கியில் நடந்த மோசடியில் ஈடுபட்டதற்காக, 7 ஆண்டுகள் சிறதண்டனை விதித்துள்ளது. இந்த மோசடி கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மோசடியில் அந்த கும்பல் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்தது. அப்போது உதவி மேலாளராக இருந்த வினய் ஓஜா குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவராக இருந்தார்.
இந்த திட்டம் அபிஷேக் ரத்தினம் என்பவரால் திடமிடப்பட்டது. அவர் ஓஜாவுடன் சேர்ந்து போலி கணக்குகளை பயன்படுத்தி பெரும் தொகையை பறித்தார். இதனால் வினய் ஓஜா உள்ளிட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அது தவிர ஓஜா 7 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், தலை மறைவான அபிஷேக் ரத்தினத்துக்கு 10 ஆண்டுகள் சில தண்டனை என்றும், 80 லட்சம் ரூபாய் அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.