
கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் லோகநாதன் தன்னுடைய தாய் பாப்பாத்தி (75) மற்றும் மகன், மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், அடிக்கடி விஜயலட்சுமி தன் குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி நேற்று முன்தினம் காலை தன்னுடைய மாமியாருடன் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் விஜயலட்சுமி மட்டும் வீட்டிற்கு தனியாக வந்த நிலையில், பாப்பாத்தியை காணவில்லை. அதன் பின் லோகநாதன் தன் தாயை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் விஜயலட்சுமிக்கு பாப்பாத்திக்கும் இடையே ஆடு மேய்க்கும் இடத்தில் சண்டை வந்ததும் தன் கணவன் பிரிந்து சென்றதற்கு மாமியார் தான் காரணம் என்று அவரின் தலையில் பாரங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.