தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்நிலையில் பழனியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று உலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தற்போது திறந்து வைத்துள்ளார்.

பின்னர் குன்றக்குடி மற்றும் பேரூர் ஆதீனங்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து முருகன் மாநாட்டின் பிரம்மாண்ட நுழைவு வாயிலை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் இந்த விழாவினை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் முருகப்பெருமானின் சிறப்புகள் குறித்து பேசியதோடு கருவறையில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாது என்று கூறினார்.