முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது, அண்ணன் அவர்களே நான் உறுதி இட்டு இந்த மண்ணின் சார்பாக… மீனாட்சி மைந்தனாக…. காட்சியளிக்கின்ற நீங்கள் தான் தீய சக்தி  திமுகவை ஒழிக்க போகின்ற ஒரே சாமி, ஒரு சாமி, ரெண்டு சாமி இல்லை,  நம்ம பழனிச்சாமி என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.

வாருங்கள் நல்லாட்சி கொடுங்கள். இனிமேல் வால் அறுந்த நரியாக திராவிட முன்னேற்ற கழகம் ஆளுகிற பொறுப்பில் இருக்கிற போதே அச்சத்தை இந்த மாநாட்டு மூலமாக…  இந்த பொன்விழா மாநாட்டு மூலமாக ஏற்படுத்தி உள்ளது.நம் பொம்மை முதலமைச்சருக்கு தூக்கம் இல்லை. இனிமேல் தூங்கவே மாட்டார் எனவே அந்த தூங்கா ஜென்மத்துக்கு சரியான பாடத்தை கொடுக்கின்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி.

10 லட்சம் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வந்திருக்கிறீர்கள…  மதுரை மண்ணின் சார்பாக உங்கள் பாதங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து அண்ணன் அவர்களே…  வருகிற 2024 நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற வேட்பாளர் வெற்றி பெறச் செய்வது  இந்த தொண்டனுடைய ஒரே லட்சியம்.  அதை செய்து காட்டுவோம்,  விரைவிலே உங்கள் தலைமையிலே தமிழகத்திலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அற்புதமான நல்லாட்சியை நீங்கள் கொடுப்பீர்கள். அதற்கு இந்த மீனாட்சி பட்டணம் சாட்சி என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.