
உத்திரபிரதேச மாநிலம் உள்ள பகர்வா கிராமத்தில் சரிதா, தர்மேந்திரா வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி பிரதமரின் வெகுஜனத் திருமண திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டனர். சரிதாவின் திருமணத்திற்குப் பிறகு, அவரது மாமியார் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட வரதட்சனையாக கேட்டுள்ளார். இதனை சரிதாவின் குடும்பத்தினர் நிறைவேற்ற தவறியது. இதனால் சரிதாவை, அவரது கணவர், மருமகன் மற்றும் மருமகள் உடல் ரீதியாக துன்புறுத்தினர். இந்நிலையில் ஆகஸ்ட் 16 2024 அன்று மீண்டும் வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்.
அப்போது அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆசிடை கையில் கொடுத்து அதனை குடிக்குமாறு வற்புறுத்தினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சரிதாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரிதாவின் கணவன் மற்றும் அவரது தங்கையை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.