
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தமிழில் மட்டும் பெயர் வையுங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருப்பினும் பட தலைப்புகள் ஆங்கிலத்தில் பெரும்பாலாக அமைகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கும் ஆங்கில தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நாளை ரிலீஸ் ஆகும் நிலையில், இந்த படத்தை எப்படி தமிழில் அழைக்க வேண்டும் என கவிஞர் மகுடேஸ்வரன் கூறியுள்ளார். அதன்படி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தை தமிழில் எஞ்ஞான்றும் மாப்பெரியது என்று கூறியுள்ளார். அதாவது எப்பொழுதும் மிகப்பெரியவன் என்று அர்த்தம். மேலும் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.