
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் ராஜ் பவனில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் பங்கேற்றுள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது மிகவும் முக்கியமானதாகும்.
அந்த கல்வியால் தான் இன்று நான் துணை ஜனாதிபதி பதவியை அடைந்துள்ளேன். உலக அளவில் பயங்கரவாதம் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாத காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஆகும். இது போன்ற தாக்குதல்களால் நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது.
நாட்டின் வளர்ச்சி வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த ஆளுநர் ஆர். என். ரவியின் முயற்சியை முழுமனதோடு பாராட்டுகிறேன். இந்த மாநாடு கல்வி நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
ஆளுநர் கவர்னராகப் பதவியேற்ற போது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். மேலும் அரசியலமைப்பை பாதுகாக்க ஆளுநர் தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.என துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.