நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அதில், தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிலச்சரிவினால் நேபாளத்தின் முக்கிய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த பெரும் மழையினால் ஏற்பட்ட மற்றுமொரு பெரிய பிரச்சனை, ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி, அவர்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர்.