குஜராத் மாநிலம் கீர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் சவ்தா வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அச்சிறுமி உணவு சாப்பிட்டு கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியை கடித்து இழுத்து கொண்டு சென்றது. சிறுமியை கடித்து கொன்றுவிட்டு வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உடலை வீசி விட்டு சென்று விட்டது. சிறுமி மாயமானதை குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் இரவு முழுவதும் தேதியுள்ளனர். பின்னர் காலையில் வீட்டின் அருகே சிறுமி சடலம் கிடைத்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமையை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.