குஜராத் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிமந்தர் சுவாமி ஜெயின் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி சாமியை தரிசிப்பதற்காக அமித் சக்பரியா மற்றும் அவரது மனைவி ரீனா தம்பதியினர் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில் அமித் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென பின்புறம் இருந்து நபர் ஒருவர் அவரை கத்தியால் 15 வினாடிகளில் 5 முறை கொடூரமாக தாக்கியுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் அவரை தடுத்த போதிலும் அவர் மீண்டும் அவரை தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து பலத்த காயம் அடைந்த அமீரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதன்பின் கோவிலில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் கத்தியால் குத்தியது பவேஷ் கோல் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் பவேஷை தீவிரமாக தேடிவந்த நிலையில் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி அவரிடம் விசாரணை நடத்தியதில் இருவருக்கும் இடையே நில தகராறு இருப்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவரிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>