
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைத்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு கீழ், கூடுதல் பயனாளிகளுக்கு உரிமை தொகை வழங்கும் விழாவிலே, பங்கேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு. அமைச்சர் பெருமக்கள், தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களே…..சேகர் பாபு அவர்களே…. சென்னை மாநகராட்சினுடைய மேயர் மாண்புமிகு. பிரியா அவர்களே…. நாடாளுமன்ற உறுப்பினர், தம்பி தயாநிதி மாறன் அவர்களே…. திரு. கலாநிதி வீராசாமி அவர்களே…..
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்வேறு தொகுதிகளில் இருந்து, பங்கேற்றிருக்கக்கூடிய அனைத்து கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற, முன்னாள், இன்னால், உறுப்பினர்களே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே, தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்க கூடிய அரசியலுடைய தலைமைச் செயலாளர், திரு. சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ். அவர்களே, அரசு உயர் அலுவலர்களே, பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகளே, தலைவர் கலைஞர் பெயரிலான திட்டத்தில் பங்கு பெற்றுள்ள,
எனது பாசமிகு அன்பு சகோதரிகளே, பத்திரிக்கை மற்றும் ஊடக துறையை சார்ந்து இருக்கக்கூடிய சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்! கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும், எனக்கு இருந்துச்சு. இப்ப காய்ச்சல் குறைஞ்சிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கு. என்னோட குரலை கேட்கிறப்பவே உங்களுக்கு நல்லா தெரியும். அதனாலதான், சில நாட்கள் வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக்கிட்டேன். இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்கணும்னு, என்னோட மருத்துவர் சொன்னாலும், என்னால மக்கள் சந்திக்காம இருக்க முடியாது.
அதனாலதான், தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலிருந்தும் காணொளி காட்சி மூலமா இணைச்சி இருக்கிற உங்களை எல்லாம் பார்க்க நான் வந்துட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டுல தொய்வு ஏற்படக்கூடாது என வந்துட்டேன். உங்களை பார்க்கும் போது எனது உடல் வலி எல்லாம் குறைஞ்சி, மனசு மகிழ்ச்சியில நிறைஞ்சிருக்கு என தெரிவித்தார்.