லெஜண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து நாயகனாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா ஹீரோயினியாக தமிழில் அறிமுகமானார். இப்படம் ஜேடி ஜெர்ரி டைரக்டில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

பெரும் பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சென்ற ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இப்படம் இன்று (மார்ச்,.3) ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.