தாய்லாந்து நாட்டில் பிரவிட் வாங்சுவான் என்பவர் பலத் பிரசாரத் என்ற கட்சியில் மூத்த தலைவராக இருக்கிறார். இவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளர், நம் நாட்டின் புதிய பிரதமரான பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த அவர், அந்த பெண் பத்திரிகையாளரின் தலையில் தாக்கினார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டார்.

இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் பத்திரிகையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெண் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தாய்லாந்து பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

“>