
இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி, நாட்டின் முதலாவது பெண் காவல்துறை அதிகாரியாக புகழ் பெற்றவர் ஆவார். அவர் புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் சமீபத்திய ஒரு தகவல், கிரண் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.அதாவது 2003ஆம் ஆண்டு, தனது மகள் ஸைனா பேடியை ரகசியமாக கண்காணித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக The News Minute வெளியிட்ட செய்தி தெரிவிக்கும்போது, 2003ம் ஆண்டு கிரண் பேடி, தனது மகள் ஸைனா, ஒரு திருமணமான ஆண் கோபால் சூரி என்பவருடன் இணைந்து ஒரு விசா மோசடியில் ஈடுபட்டிருப்பதை அறிந்ததாக கூறப்படுகிறது. அதில் கோபால் சூரி ஒரு ஹோட்டலை டெல்லியில் நடத்திக் கொண்டிருந்த நிலையில் இருவரும் கிரண் பேடியின் பெயரை பயன்படுத்தி மக்களுக்கு வெளிநாட்டு விசாக்கள் ஏற்பாடு செய்து பணம் சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கிரண் பேடி அந்த நேரத்தில் நியூயார்க்கில் இருந்தபோதும், டெல்லி காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு, ஸைனாவை கண்காணித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த ரகசிய கண்காணிப்பை நடத்த கிரண் பேடி தனியார் மாயவியல் தடயவியல் நிறுவனம் ஒன்றை நியமித்ததாகவும், இந்த கண்காணிப்பின் போது 20 ஆடியோ கேஸெட் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கேஸெட்டுகளில், ஒரு சுவிஸ் தூதர் மீது 2003ம் ஆண்டு ஒரு பாலியல் வன்கொடுமை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல்கள் எதுவும் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கிரண் பேடி சட்டப்படி அனுமதியில்லாமல் கண்காணிப்பு நடத்தியது உண்மையா? இல்லையா? என்ற கேள்விகள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .