
இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குரங்கு ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கியது. மர படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த குழந்தையை திடீரென அந்த குரங்கு ஆக்ரோஷத்துடன் இழுத்து செல்ல முயன்றது.
அதனால் மற்ற குழந்தைகள் பயத்தில் ஓடினார்கள். குழந்தையின் அலறலை கேட்டு பெற்றோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அப்போது குரங்கிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாய் தனது மடியில் பாதுகாப்பாக கிடத்தினார். ஆனாலும் குரங்கு தனது ஆக்ரோஷமான தாக்குதலை தொடர்ந்தது. இந்நிலையில் தனது கைகளில் இருந்த குழந்தையை இழுக்க குரங்கு முற்பட்டபோது தந்தை குழந்தையை துரத்தும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனாலும் குரங்கு விடாமல் குழந்தையை தாக்க சென்றது. இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த குழப்பமான காட்சிகள் வனவிலங்குகளால் ஏற்படும் கடுமையான ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது.மேலும் விலங்குகள் இருக்கும் பகுதிகளில் அதிக விழிப்புணர்வின் முக்கியமான தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
Monkey tries to take baby with him. pic.twitter.com/mspoVUDm5o
— Creepy.org (@creepydotorg) May 26, 2024