
உலகில் பல்வேறு உயிரினங்கள் மருத்துவத் துறைக்கு மிக முக்கியமான பங்களிப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, குதிரைவாலி நண்டு (Horseshoe Crab) எனப்படும் உயிரினத்தின் ரத்தம் மருத்துவத் துறையில் அதிக மதிப்புடையதாக கருதப்படுகிறது. இந்த நண்டின் ரத்தத்தில் பாக்டீரியா மாசுபாட்டைக் கண்டறியும் தன்மை இருப்பதால், மருத்துவ உலகில் இதற்கு விலை மிக உயர்ந்தது. ஒரு லிட்டர் ரத்தத்தின் விலை சுமார் 13 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நண்டின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும் மற்றும் ஹீமோ சயினின் என்ற பொருள் இதற்குக் காரணம். இவற்றின் மருத்துவ பயன்பாடுகளால் உலகம் முழுவதும் 60 லட்சம் குதிரைவாலி நண்டுகள் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த உயிரினத்தை அழியும் அபாயம் உள்ள உயிரினங்களின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டு சேர்த்துள்ளனர்.
இந்த ரத்தம் மனிதர்களின் உயிர்காக்கும் மருந்துகளுக்காக பயன்படுகின்றது. முக்கியமாக, இந்த நண்டுகளைத் தொந்தரவு செய்யாமல் ரத்தம் எடுத்து, பின்னர் அவற்றை மீண்டும் கடலில் விட்டுவிடுகின்றனர்.