
உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள நாணயம் அமெரிக்க டாலர் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அமெரிக்க டாலர் உலகின் 10ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் பவுண்ட் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் உலகின் மிக விலை உயர்ந்த நாணயம் குவைத் தினார் ஆகும்.
குவைத் 1 தினாரின் மதிப்பு இந்திய ரூபாயின் படி ரூபாய் 253.35 ஆகும். இந்தியாவிலிருந்து பலரும் குவைத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு ஒருவர் 1000 குவைத் தினார் சம்பாதிக்கிறார் என்றால் இந்திய மதிப்பின்படி சுமார் ரூபாய் 2,83,354 சம்பளம் வாங்குகிறார் என்பதாகும். இதற்கு காரணம் குவைத்தின் நிலையான பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்கள், வரி விலக்கு முறைகள் ஆகியனவாகும்.
குவைத்தில் ஒவ்வொரு வேலைகளுக்கும் சம்பள விதம் மாறுபடும். உதாரணமாக ஐடியில் வேலை பார்க்கும் இன்ஜினியர்களுக்கு மாதம் 626 குவைத் தினார் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு பட்டதாரி இளைஞருக்கு 500 குவைத் தினார் சம்பளம் வழங்கப்படுகிறது. இதேபோன்று தொழிலாளர்கள் சம்பளம் 1260 குவைத் தினார் வரை இருக்கலாம். குவைத்தில் உச்ச சம்பளம் ஆனது 5640 குவைத் தினார். குவைத் மட்டுமல்ல பக்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளும் தினார் நாணயத்தை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் உலகிலேயே மிக உயர்ந்த மதிப்புள்ள நாணயமாக குவைத் தினார் கருதப்படுகிறது.