
ஐபிஎல் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதைத் தொடர்ந்து லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி மே 24-ல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய கோலியால் பெங்களூர் அணிக்கு 197 ரன்கள் குவிந்தது. அதன் பிறகு களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மல் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து வெற்றிக்கு உதவினார். குஜராத் அணியின் வெற்றியால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் மும்பை அணிக்காக கேமரூன் கிரீன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் விராட் கோலி அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
.@CameronGreen_ & @ShubmanGill batted well for @mipaltan. 😜
Amazing innings by @imVkohli too to score back-to-back 100’s. They all had their methods & were in the class of their own.
So happy to see MI in the playoffs. Go Mumbai. 💙 #AalaRe #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/D5iYacNEqc
— Sachin Tendulkar (@sachin_rt) May 21, 2023