ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோல்ம் விமான நிலையத்தில் இருந்து ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் அமெரிக்காவின் மியாமி நகரை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வானில் சென்று கொண்டிருந்த விமானம், வானிலை மோசமான காரணத்தினால் கடுமையான டர்புலன்ஸை எதிர்கொண்டது. இந்த விமானம் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

டர்புலன்ஸ் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து மேல் நோக்கி தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. டர்புலன்ஸ் பல மணி நேரம் நீடித்ததால் பயணம் தொடர முடியாமல் மீண்டும் ஐரோப்பாவுக்கே விமானம் திரும்பியது. பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஒருவர் காயமுற்று உள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.