
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது வீட்டின் அருகே உள்ளவர்கள், அவர்களை தொடர்பு கொண்டு வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் கொடுத்தனர்.
அதன்படி விரைந்து வந்த தம்பதி பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதோடு அவர்களது வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.