
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருந்து, நமது உரிமையை காவிரி நதிநீரில் பெற்று, நமது விவசாய மக்களின் வாழ்க்கைக்கு எல்லா விதத்திலும்… என்றைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த…. கேப்டன் உடைய ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தஞ்சையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கின்றோம்.
எத்தனையோ முறை கேப்டன் அவர்கள் தஞ்சைக்கு வந்து, விவசாயிகளுக்காக போராடி இருக்கோம். முல்லை பெரியாருக்காக போராடி இருக்கோம். உண்ணாவிரதத்தை பல தடவை நாங்கள் நடத்தி உள்ளோம். 1968 ஆம் ஆண்டு காலத்திலிருந்து இந்த காவிரி பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 55 ஆண்டு காலமாக இந்த காவேரி பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்த தீர்வும் அதற்கு கிடைக்கவில்லை.
நாகப்பட்டினத்தில் ராஜ்குமார் அவர்கள் தன்னுடைய பயிர் வாடி போனதை பார்த்து, ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டாரு. நேற்று அவருடைய மனைவியோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஆறுதல் சொன்னோம். எங்கள் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அனைவருக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலைமையே இப்படி இருக்கிறது என்றால் ? அப்ப நாட்டின் நிலைமை என்ன ? இது யாருடைய பூமி ? ராஜ ராஜ சோழன் ஆண்ட பூமி. யானை கட்டி போர் அடித்த ராஜ ராஜ சோழன் வாழ்ந்த இந்த தஞ்சையிலே… இன்னைக்கு விவசாயிகள் தன்னுடைய பயிரை கண்டு… விளைவிக்க முடியாமல்… கடனாளியாக ஆகி…. இன்னைக்கு இறக்கின்ற நிலையை காணும்போது….. உண்மையிலேயே மிக, மிக மனவேதனையோடு நான் பதிய வைக்கின்றேன் என தெரிவித்தார்.