
கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி பண்ணையில் இருந்து கைது செய்யப்பட்டார்.
இவர் அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் வியாபாரி விஜயகுமாரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்தார். கடந்த ஆண்டு விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் ஊராங் ஒரு மொபைல் போனை திருடி அதை பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சிறையில் இருந்தார். இதனால் அவரது காதலி அவரை விட்டு சென்றார். இதனால் அவர் மனநில பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று காலை கொட்டாயம் நகரில் உள்ள அவர்களது வீட்டில் வியாபாரி விஜயகுமார் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த கைரேகை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை உறுதி செய்து கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையின தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.