அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான செயலாகும். இதேபோன்று பாகிஸ்தானில் உள்ள ஒரு மகன் தனது தாய் விருப்பப்பட்டார் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் அஹசாத் தனது இணையதள பக்கத்தில் நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவில், தனது தாயின் விருப்பத்தை தொடர்ந்து செய்து வருவதாகவும், இந்த நிலையில் தனது தாய் விருப்பப்பட்ட ஆணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதால் 18 வருடங்களுக்குப் பின் தனது தாய் காதலிலும், வாழ்க்கையிலும் விருப்பப்பட்டதை செய்வதற்கு அவரைத் தொடர்ந்து ஆதரித்து வந்தேன்.

தாயின் இரண்டாவது திருமணம் குறித்து வெளியில் சொல்ல பயந்த எனக்கு அனைவரும் தந்த ஆதரவும், அன்பும் மிகப்பெரியதாகும். என தனது தாயின் திருமண நாளன்று உருக்கமான பதிவாக வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.