
நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் கார்த்திக் மதிரா. ஹைதராபாதை சேர்ந்த இவர், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினார்.
கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் இருந்த போதும், அவர் முற்றிலும் வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்தார். நாட்டை சேவை செய்வதையே தனது உண்மையான கனவாகக் கொண்டு, கிரிக்கெட்டையும், வேலை வாய்ப்பையும் விட்டுவிட்டு, UPSC தேர்வுக்காக தனது முயற்சியை தொடங்கினார்.
கார்த்திக் மதிரா, ஜவஹர்லால் நெரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்தவர். படிப்பை முடித்த பின், டெல்லாயிட் நிறுவத்தில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தார்.
ஆனால் அந்த வேலை அவர் மனதுக்கு பொருத்தமாக இல்லை என்பதை புரிந்துக்கொண்டார். கிரிக்கெட்டில் ஏற்பட்ட காயமும், சில தனிப்பட்ட காரணங்களும் அவரை UPSC பாதைக்கு கொண்டு சென்றன. அதன் பின், முழு நேரத்தையும் UPSC தேர்வுக்காக செலவழிக்கத் தீர்மானித்தார்.
முதல் மூன்று முயற்சிகளில், முதன்மை தேர்வில்கூட தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனாலும், கார்த்திக் எதையும் கைவிடவில்லை. பொது அறிவுடன் Sociology என்ற தேர்வாய்வுப் பாடத்தையும் ஊக்கமாக பயின்றார். பலரும் UPSC தேர்வை மூன்று கட்டங்களாக தயாரிப்பது வழக்கமாக இருந்தாலும், கார்த்திக் முழுத் தேர்வை ஒரே கட்டமாக அணுகினார்.
இந்த சுயமான ஸ்ட்ராடஜி அவருக்கு பலனளித்தது. 2019ஆம் ஆண்டு, நான்காவது முயற்சியில், அனைத்து இந்திய ரேங்க் 103ஐ பெற்று UPSC தேர்வில் வெற்றி பெற்றார். இன்று மக்களுக்காக ஒரு நேர்மையான IPS அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.