நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  என்னுடைய உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.  நம்முடைய வீரப் பெரும் பாட்டனர்கள் மாமன்னர்கள்,  மருது இருவர் தூக்கில் இடப்பட்ட நாளில்  பலபேரை தூக்கிலிட்டார்கள், அதில் ஒருவன் 7 வயது சிறுவன்.  நம்முடைய பாட்டனார் கேட்டார்…. நான் உன்னை எதிர்த்து சண்டை செய்தேன்,  என்னை தூக்கிலிடுகிறாய் சரி… இந்த 7 வயது சிறுவன் செய்த பிழை என்ன ? அவனை எதற்காக தூக்கில் இடுகிறாய் என்று கேட்டார்.

நம்முடைய பாட்டன்… எவனுக்கு ஐரோப்பிய ரத்தம் ஓடலையோ அவன் எல்லாம் என்னோடு வா என்று அறைக்கூவல் விடுத்து,  உழைக்கும் வேளாண் பெருங்குடி மக்களையே தன் படையில் இணைத்து பெரும்படையாக கட்டி 8 மாதங்கள் வெள்ளைகாரனை எதிர்த்து சண்டை செய்த ஒரே ஒரு வீரன் நம்முடைய பாட்டங்கள்தான். ஆனால் 8 நாள் சண்டையிட்ட சிவாஜியை மராட்டிய மன்னரை வீர சிவாஜி என்று வரலாறு போற்றும்….

எட்டு மாதங்கள் சண்டை போட்ட நமது நமது பாட்டன்,  வரலாற்றில் எந்த பக்கத்திலும் இல்லை. அன்பிற்குரிய தம்பி, தங்கைகளே…. நம் பிள்ளைகள் எல்லாம் எனக்கு வால்  கொடுப்பார்கள்,  வேல் கொடுப்பார்கள். அது அவ்வளவும் என் பூஜை அறையில் தான் குவிந்து கிடைக்கிறது. அன்றைக்கு இதே ஆயுதத்தை வைத்து வாள், வேல் யும் வைத்து போர் செய்தோம்.  எல்லாம் சரியாக இருந்தது. இன்றைக்கு அந்த ஆயுதங்களை எல்லாம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்தோம்….  எல்லாம் நாசமா போனது என தெரிவித்தார்.