தோசை, சட்னி, சாம்பாருக்காகவே இந்தியாவுக்கு மீண்டும் வரவேண்டும் என பிரிட்டன் தூதர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு தூதராக இருப்பவர் அலெக்ஸ் பில்லிஸ். உணவு பிரியரான இவர் இந்தியாவில் உள்ள சுவையான உணவுகள் மீது அதிகம் விருப்பம் கொண்டவர். இந்திய உணவின் சுவைக்கு சான்றாக அது குறித்து எண்ணற்ற பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் தோசை, வடாபாவ், ரசகுல்லா என பல உணவு பண்டங்களை சாப்பிடுவது போல் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்திய உணவு வகைகளின் மீது கொண்டுள்ள அதிக அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தோசை சாப்பிடுவதற்காக பெங்களூர் வரவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பல இந்தியர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.