இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு மார்க்கெட் பகுதியில் ஒரு பெண் தன் காதலனுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சாலையை கடக்க தயாராக இருந்தபோது திடீரென பின்னால் இருந்து வந்த ஒருவர் அந்த பெண்ணின் கையில் இருந்த பையை திருடிவிட்டு தப்பி ஓடினார்.

உடனடியாக அந்தப் பெண்ணின் காதலன் ஒரு ஹீரோ போல் செயல்பட்டு அந்த திருடனை பிடித்தார். பின்னர் அந்த கொள்ளையனுக்கு அவர் தர்ம அடி கொடுத்த நிலையில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரிடமிருந்து பையை எடுத்து தன் காதலிடம் கொடுத்துவிட்டு இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பான காட்சி அங்கிருந்த ஒரு சிசிடிவியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் ‘நேரடி கர்மா அடித்தது” என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.