ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஹர்ஷா என்ற 35 வயது பெண் பேருந்தில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷா விடுமுறைக்கு இந்தியாவில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில் வந்திறங்கினார். பின்னர் விஜயவாடாவில் இருந்து மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார்.

இந்நிலையில் பயணத்தின் போது ஹர்ஷாவுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. சக பயணிகள் அவர் வலியால் துடித்ததைப் பார்த்து , பஸ் டிரைவரை எச்சரித்தனர், பின்னர் அருகிலுள்ள நிறுத்தத்தை அடைந்ததும், அவளை பரிசோதிக்க ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். துருதிஷ்டவசமாக, மருத்துவர் வருவதற்குள், ஹர்ஷா ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தினார்,  இச்சம்பவம் சக பயணிகளையும் அவரது குடும்பத்தினரையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது .