ரயில்கள் தாமதமாக புறப்படுவது மற்றும் தாமதமாக வந்து சேர்வது எல்லாம் இந்தியாவில் சகஜமாக மக்களுக்கு பழகி விட்டது. 2, 3 மணி நேரங்கள் முதல் 1, 2 நாட்கள் வரை கூட ரயில்கள் தாமதமாக வந்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தியாவிலேயே அதிக தாமதமாக வந்த ரயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா. 42 மணி நேரத்தில் பயணத்தை முடிக்க திட்டமிட்ட ரயில், 3 ஆண்டுகள் 8 மாதங்கள் மற்றும் 7 நாட்களை எடுத்துக் கொண்டது. இது 2014ம் ஆண்டு ஆந்திரா பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்திக்கு சென்ற சரக்கு ரயில் தான். 2014ம் ஆண்டு பஸ்தியில் வசிக்கும் தொழிலதிபரான ராமச்சந்திர குப்தா என்பவர் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 14 லட்சம் மதிப்பிலான டைமோனியம் பாஸ்பேட்-ஐ தனது வணிகத்திற்காக ஆர்டர் செய்துள்ளார்.

இது திட்டமிட்டபடி நவம்பர் 10 2014 ஆம் ஆண்டு 1316 DAP சாக்குகளை, ஒரு சரக்கு ரயிலில் ஏற்றி விடப்பட்டது. அந்த ரயில் திட்டமிட்டபடி புறப்பட்டது. ஆனால் ரயில் வரவேண்டிய நேரத்தில் வரவில்லை. இது குறித்து ராம்சந்தர குப்தா புகார் அளித்தார். அதன் பிறகு விசாரணை நடத்தியதில் ரயில் வரும் பாதையிலேயே மாயமானது தெரிய வந்தது. அந்த ரயில் வழி தவறி சென்றதும் தெரியவந்தது. ரயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பிறகு, அதில் உள்ள ஒரு பெட்டி பயணத்திற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளது. எனவே அந்த ரயில் ஒரே இடத்தில் நீண்ட காலத்திற்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. கடைசியாக ஜூலை 2018 அன்று தான் ரயில் பத்தி நிலையத்திற்கு சென்றது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் சும்மா இருந்ததால் உரம் முற்றிலும் பாலானது குறிப்பிடத்தக்கது.