
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மேலசண்முகபுரம் என்ற பகுதியில் சிறுவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனைப் பார்த்த போக்குவரத்து காவல்துறையினர் அச்சிறுவனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதோடு அவரது தந்தையை அழைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து காவல்துறையினர் சிறுவனின் தந்தைக்கு ரூ. 25000 அபராதம் விதித்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.