
“பரிதாபங்கள்” என்ற youtube சேனலை நடத்தி வருபவர்கள் கோபி சுதாகர். இவர்கள் பல்வேறு ட்ரோல் வீடியோக்களை செய்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர்கள். இவர்கள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேங்க் பரிதாபங்கள், குடிகாரன் பரிதாபங்கள்,தாத்தா பாட்டி பரிதாபங்கள் போன்ற நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் அரசியல் தலைவர்கள்,நடிகர், நடிகைகள் ஆகியோர் போல வேடமிட்டு அவர்களை ட்ரோல் செய்து மக்கள் மத்தியில் சிறந்த காம்போவாக விளங்கினர்.
தற்போது பரிதாபங்கள் சேனலில் கடைசியாக வெளியிட்ட “லட்டு பரிதாபங்கள்” என்ற காணொளி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த காணொளியில் திருப்பதி தேவஸ்தானத்தை நக்கல் நையாண்டி செய்தும், சைவ பிரியர்களை ட்ரோல் செய்யும் வகையிலும், துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விரத முறையை கலாய்த்தும் 15 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் “பரிதாபங்கள்” youtube சேனல் கடைசியாக வெளியிட்ட “லட்டு பரிதாபங்கள்” வீடியோவை டெலிட் செய்துள்ளது
. இதுகுறித்து கோபி, சுதாகர் தங்களது இணையதள பக்கங்களில் கூறியதாவது, தாங்கள் நகைச்சுவைக்காக மட்டுமே வீடியோவை பதிவேற்றம் செய்தோம்.வேறு எக்காரணமும் இல்லை.இந்த வீடியோ யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அந்த வீடியோவை தங்களது சேனலிலிருந்து நீக்கி உள்ளதாகவும் கூறியுள்ளனர். வீடியோக்கள் நீக்கப்பட்டு இருந்தாலும் இணையதளத்தில் சிலர் அந்த வீடியோவை மீண்டும் பதிவேற்றம் செய்து வைரலாக்கி கோபி,சுதாகருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.