
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டன. அதன் பின்னர் மக்களின் போராட்டம் அதிகரித்தது. இதனால் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படை திணறி வருகிறது. மத்தியில் இருந்து கூடுதல் காவல் படையினரை மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் பாஜக கலவரத்தை விரும்புவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதோடு மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் பிரச்சனைகளை காங்கிரஸ் தீர்க்காமல் விட்டது. இதிலிருந்து மணிப்பூர் இன்னும் மீண்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு வன்முறை தொடங்கியதிலிருந்து நிலைமையை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டு போராளிகளின் சட்ட விரோத குடியேற்றத்தை, காங்கிரஸ் அரசு சட்டபூர்வமாக்கியது. இது தொடர்பான ஒப்பந்தங்களில் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கையெழுத்திட்டார். அதை கார்கே மறந்து விட்டதாக தெரிகிறது. இந்தப் போராளி தலைவர்கள் கைது செய்யப்படாமல் இருக்க, நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.
உங்கள் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு சிக்கலும், நிர்வாகத் தோல்வியும் உலகையே அழித்துள்ளது. காங்கிரசை போல் இல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒருபோதும் இதை செய்யாது. மோடி அரசால் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ள அனைத்திலும் வடகிழக்கு முழுமையான மாற்றத்தை கண்டுள்ளது. அதனால் திரு.கார்கேயின் கூற்றுகள் தவறானது. அவர் இந்த அதிருப்திகளை உதாசீனப்படுத்தியதுடன், நீங்களும் உங்கள் கட்சியும், வடகிழக்கையும், அதன் மக்களையும் அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகின்றீர்கள் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் நட்டாவின் கடிதம் பொய்கள் நிறைந்தது என்று கார்கே பதில் அளித்துள்ளார்.