ஈரோடு மாவட்டத்தில் மேரிஸ் டெல்லா என்ற பெண் வசித்து வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு வாடகைக்கு வீடு இருக்குமா என்று கேட்டு முகம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண் மேரி ஸ்டெல்லாவிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல விவரங்களை கேட்டுக்கொண்டு அவர் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியே நோட்டமிட்டு உள்ளார்.

பின்பு அவரின் கழுத்தில் இருந்து மூன்று சவரன் தங்கச் சங்கிலி பறிக்க முயன்றும் போது மேரி ஸ்டெல்லா சத்தமிட்டு அலறினார்.

பின்பு இந்த சத்தத்தை கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் சங்கிலி பறிக்க முயன்ற பெண்ணை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்தப் பெண் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.