
மனித வாழ்வில் தண்ணீர் மிகவும் அடிப்படையான ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இதனை நோய் மற்றும் நுண்ணறிவுகள் குறித்த தகவல்களை பகிரும் மிகப் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுதீர் குமார் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டதாவது, சமீபத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது உடலை தூய்மை ஆக்குவதற்கு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்ற அறிவுரையை தீவிரமாக எடுத்துக் கொண்டார்.
இதனால் காலையில் எழுந்தவுடன் சுமார் 4 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளார். குடித்த ஒரு மணி நேரத்திற்குள் அவருக்கு தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்களில் தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டு சுயநினைவில்லாமல் மயங்கி கீழே சரிந்துள்ளார். உடனே இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அதிகப்படியான தண்ணீரும் ஆபத்தை உருவாக்கும் என டாக்டர் சுதீர் குமார் தனது பதிவில் கூறியுள்ளார்.
40-year-old drank plenty of water in the morning for “detoxification”, but it resulted in a life-threatening complication
40-year-old Ms Rajni (name changed) was told to drink water in the morning to detoxify her body. It was claimed that drinking excess water in the morning…
— Dr Sudhir Kumar MD DM (@hyderabaddoctor) December 22, 2024