ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் விஜயாபுரம் மண்டலம் வீராபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான பழக்கம் போகப்போக கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து  இவர்கள் இருவரும் திருப்பதி மாவட்டத்திலுள்ள பிச்சாட்டூர் பஜார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியேறினர்.

இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அசோக் தில்ஷாத்திடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கவலையான தில்ஷாத் மொபைல் போன் மூலம் அழைத்தும் பதில் அளிக்காததால் வருத்தமடைந்தார். அதனால் தில்ஷாத் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகளின் தற்கொலை குறித்து தில்ஷாத்தின் தந்தை பிச்சாட்டூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது