விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக செல்வி தனது தாய் மதனவள்ளி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் கார்த்திகேயன் குடும்பம் நடத்த வருமாறு தன் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு நேரம் செல்வி தனது தாயுடன் கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கார்த்திகேயனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் செல்வியை கைது செய்தனர்.