பெங்களூரில் ஜலஹள்ளி என்னும் பகுதியில் ராஜ்துலாரி சின்ஹா(76) என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை 12 தெரு நாய்கள் சூழ்ந்து கொடூரமாக தாக்கியத்துடன் கடித்துள்ளது.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் தடுக்க முயற்சி செய்த போது அவர்கள் மீதும் தாக்க தொடங்கின. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விமானப்படை வீரரின் மாமியார் என்பதும் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நாய்கள் சூழ்ந்து கடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.