
டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த தர்மேந்திர என்ற குற்றவாளி, ஏப்ரல் 20 தேதி, பண்ணை வீட்டின் சுவரை தாண்டி உள்ளே நுழைந்து, இரவு 2 மணி முதல் 2.30 மணி வரை, முகம் மறைத்தபடி, தாயை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, குற்றவாளி கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தர்மேந்திர ஒரு தினக்கூலி தொழிலாளி என்பதும், குற்றம் நிகழ்ந்தவுடன் இடத்தை விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்